JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கான மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற, வரும் 31-ம்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆர்.சீத்தாலட்சுமி அறிவி்த்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில்மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறித்துவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தைத் சார்ந்த அரசு, அரசு உதவி பெறும், மத்திய, மாநில அரசுகளால் அஙகீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2020-21-ம் கல்வி ஆண்டில் ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு பள்ளிப் படிப்பு கல்வி உதவித்தொகையும், பிளஸ் 1 முதல் முதல் ஆராய்ச்சி படிப்பு வரை அதாவது, ஐடிஐ, ஐடிசி வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், மருத்துவம், செவிலியர், ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்களை முதுகலைபட்டப்படிப்புகள் பயில்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகையும், தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகையும் மத்திய அரசால் வழங்கப்படுகிறது.
இந்த உதவித்தொகையைப் பெற மத்திய அரசின் www.scholarship.gov.in என்ற கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இக்கல்வி உதவித்தொகையைப் பெற தகுதியான மாணவ, மாணவியர் வரும் 31-ம் தேதி வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டம் தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகள் மத்திய சிறுபான்மையினர் நலத் துறையின்இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்டபிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரைத் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment