JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
பள்ளிப்பாடத்திட்டங்களை குறைப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைப்படி 40% பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதால் தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் நடப்பு கல்வியாண்டு மாணவர்களில் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பள்ளிகள் திறக்கப்பட்டால் மாணவர்களின் கல்வி சுமையை குறைக்கும் வகையில் பாடத்திட்டத்தின் அளவை குறைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதனை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் பாடத்திட்டங்களை குறைப்பது தொடர்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக ஈரோட்டில் உள்ள கோபிச்செட்டி பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மருத்துவப்படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீட்டுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்குவது குறித்து முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொள்வார்.
ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு குறித்து 2 வழக்குகள் நீதிமன்றத்தில் இருந்தன. இதில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பும, சென்னௌ உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளன. இது இரண்டையும் ஒருங்கிணைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
கணினி தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. சிறப்பாசிரியர்களுக்கும் நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கு முடிந்தவுடன் கலந்தாய்வு மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். மேலும் பள்ளி பாடத்திட்டங்கள் குறைப்பு தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. 14 பேர் கொண்ட அந்த குழுஅளித்த பரிந்துரையின் அடிப்படையில், 40 சதவீதம் பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 60 சதவீதம் பாடங்களில் இருந்து தேர்வுக்கு வினாக்கள் கேட்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment