Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, October 20, 2020

டிஎன்பிஎஸ்சி மோசடி: 43 அரசு ஊழியர்கள் இடைநீக்கம்

டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-4 தேர்வு, குரூப்-2ஏ தேர்வு மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வுகளில் முறைகேடு செய்ததாக 97 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர். 

கைதானவர்களில் 94 பேர் அரசுப் பணிகளில் இருந்ததால், அவர்கள் மீது துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஏற்கெனவே 51 பேர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து தற்போது மேலும் 43 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

முறைகேடாக அரசுப் பணி பெற்றதாக கைதானவர்களில் பெரும்பாலானவர்கள் சார்பதிவாளர் மற்றும் தாசில்தார் அலுவலகங்களில் உதவியாளராகவும், கிராம நிர்வாக அலுவலராகவும் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. 

மேலும், 40 பேரிடம் தற்போது விசாரணை நடந்து வருகிறது. அதிலும் பெரும்பாலானவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment