Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, October 5, 2020

சாப்பிடும்போது செய்ய வேண்டியவை; செய்யக் கூடாதவை!

பொதுவாக சாப்பிட அமரும் போது மனதை அமைதியாக வைத்திருக்க வேண்டும். கடும் கோபத்தோடு சாப்பிட்டால், நாம் சாப்பிடும் சாப்பாடு விஷமாகி விடும். அதனால் மனது அமைதியாக இருக்க வேண்டும்.

உணவைப் பரிமாறிய பின் ஓரிரண்டு நிமிடங்கள் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும் என்கிறார்கள். அந்த உணவைப் பார்த்த மாத்திரத்தில், நாவில் நீர் ஊறும், அதே போல உள்ளே செரிமானத்திற்குத் தேவையான அமிலங்கள், என்சைம்கள் அனைத்தும் சுரக்க ஆரம்பிக்கும். 

அடுத்து முதல் கவளத்தை வாயில் எடுத்து வைக்கும் முன், ஒரு மடக்கு தண்ணீரைக் குடிக்க வேண்டும். ஏனென்றால், வயிறு காலியாக இருக்கும்போது, அதில் அமிலம் சுரந்திருக்கும் அந்த அமிலத்தை நீர்த்துப் போகச் செய்வதற்கே ஒரு மடக்கு தண்ணீர்.

சாப்பிடும்போது வாயைத் திறந்து கொண்டு சத்தமிட்டு மென்று சாப்பிடக் கூடாது. கூட்டமாக குடும்பத்தோடு சேர்ந்து அமர்ந்து உணவைப் பகிர்ந்து சாப்பிட வேண்டும். புரை ஏறும் வகையில் பேசிச் சிரித்துக் கொடன்னு சாப்பிடக் கூடாது. சாப்பிடும்போது ஒரு கவளம் சோறுக்கு ஒரு டம்ளர் தண்ணீர் என்ற வகையில் தண்ணீர் குடித்து குடித்து சாப்பாட்டை உள்ளே இறக்கக் கூடாது.

சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்தே தண்ணீர் குடிக்க வேண்டும். எப்போதும், சோறு குறைவாகவும், காய்கறிகளை அதிகமாகவும் சாப்பிட வேண்டும். 

உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளைத் தவிர்த்து, நல்ல சத்தான, கீரை வகைகள், காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் சாப்பிட வேண்டும்.

ஒரே வகையான காய்கறிகள், பழங்களை சாப்பிடுவதை தவிர்த்துவிட்டு, எல்லா விதமானக காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

இப்படி சாப்பிடுவதால் நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, ஊட்டச் சத்து குறைபாடு இல்லாமலும் இருக்கும்.

No comments:

Post a Comment