JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
தமிழக அரசு பணியாளர்களுக்கான துறை தேர்வுகள் அனைத்தையும், 'ஆன்லைன்' முறையில் நடத்த, டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்துள்ளது.தமிழக அரசு துறைகளில் பணியாற்றும், பல்வேறு நிலை ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு, பல்வேறு தகுதிகள் அடிப்படையில், பதவி உயர்வு, சம்பள உயர்வு மற்றும் சலுகைகள் வழங்கப்படும்.
பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுக்கு, துறை ரீதியான தேர்வுகளில், ஊழியர்கள் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு, டி.என்.பி.எஸ்.சி.,யால் எழுத்து தேர்வு முறையில் நடத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், கொரோனா வைரஸ் பிரச்னை உள்ளதால், வரும் காலங்களில் நடக்க உள்ள துறை தேர்வுகளை, ஆன்லைன் முறையில் நடத்த, டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்துள்ளது.
இதற்கான ஆன்லைன் தேர்வு நடத்தும் நிறுவனங்களை தேர்வு செய்யும் பணி துவங்கியுள்ளது.இதற்கிடையில், டி.என்.பி.எஸ்.சி., நடத்திய மூன்று தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.மருத்துவ ஆய்வாளர் மற்றும் இளநிலை பகுப்பாய்வாளர் பணியில், 59 காலியிடங்கள்; பொதுப்பணி துறை உதவி இயக்குனர் மற்றும் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பணியில், 102 காலியிடங்களுக்கு, ஜூன் மற்றும் நவம்பரில் தேர்வுகள் நடந்தன.
இந்த தேர்வுகளின் முடிவுகள், நேற்று அறிவிக்கப்பட்டன.சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளவர்களின் விபரம், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment