Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, October 11, 2020

பெண்கள் பிரச்சனைகள், சர்க்கரைநோய் வராமல் தடுக்கும் பூசணி விதை

பூசணி விதையில் நார்ச்சத்து, புரதம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் இ ஆகிய சத்துகள் நிறைவாக உள்ளன. மேலும், மாங்கனீஸ், பாஸ்பரஸ், மக்னீசியம், தாமிரம், துத்தநாகம் ஆகிய அத்தியாவசிய தாதுச்சத்துகள் நிறைவாக உள்ளன. 100 கிராம் பூசணி விதைகளைச் சாப்பிடுவதன் மூலம் 600 கலோரிகளைப் பெறலாம்.

தாவர உணவுகள் மூலம் கிடைக்கக்கூடிய ஒமேகா-3 அமிலம் பூசணி விதைகளில் அதிகளவில் உள்ளன. இந்த அமிலம் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்யும். சர்க்கரைநோய் வராமல் தடுக்கும்.

ஆரோக்கியமான கொழுப்பு விதைகளில் நிறைந்துள்ளது. இதில் உள்ள நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்டுகள் கல்லீரல் இயக்கத்தைச் சீராக்கும். இதனுடன் ஆளி விதைகளைச் சேர்த்து உண்டால் பலன் மேலும் அதிகரிக்கும்.

பெண்கள், இந்த விதைகளை நெய்யில் வறுத்து, அதை தினமும் சாப்பிட்டுவந்தால், மாதவிடாய் வலி மற்றும் வெள்ளைப்படுதல் பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.

முதுமைக் காலத்தில் கனிமச்சத்துக்கள் குறைபாட்டினால் எலும்புகளின் அடர்த்தி குறைந்து ஏற்படுவது தான் ஆஸ்டியோபோரோசிஸ்.

பூசணி விதைகளில் இயற்கையாகவே ஜிங்க் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் உள்ளது. இது எலும்புகளின் வலிமையை அதிகரிக்கும்.

பூசணி விதைகள் இறுதி மாதவிடாய் கால அறிகுறிகளான உடல் சூடு, தலைவலி, இரவு நேர வியர்வை மற்றும் ஏற்ற இறக்க மனநிலை போன்றவற்றைக் குறைக்கும்.

எனவே பெண்கள் தினந்தோறும் ஒரு கையளவு பூசணிக்காய் விதைகளை சாப்பிட்டு வந்தால், மாதவிடாய் காலத்தில் சந்திக்கும் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

No comments:

Post a Comment