Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, October 1, 2020

ஓராசிரியர் பள்ளி ஆசிரியர்களுக்கு விலையில்லா தையல் இயந்திரம்

திருவள்ளூர் அருகே செயல்பட்டு வரும் ஓராசிரியர் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளும் நோக்கத்தில் 108 பேருக்கு தனியார் நிறுவனம் சார்பில் விலையில்லா தையல் இயந்திரங்கள் மற்றும் மாணவர்கள் குடும்பத்தினருக்கு விலையில்லா மளிகை பொருள்களையும் வழங்கினர்.

திருவள்ளூர் அருகே உளுந்தை கிராமத்தில் விவேகானந்தா கிராம அபிவிருத்தி சங்கம் சார்பில் ஓராசிரியர் பள்ளி கிராமங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு விலையில்லா தையல் இயந்திரங்களும், 435 மாணவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான விலையில்லா மளிகை பொருள்களும் வழங்கும் தனியார் நிறுவனம் முன்வந்தது.

அதன் அடிப்படையில் திருவள்ளூர் அருகே சுவாமி விவேகானந்தா வித்யாலயா பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தனியார் நிறுவன குழுமத்தின் நிர்வாக இயக்குநர் அகிலா சீனிவாசன், அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி முரளி ஆகியோர் பங்கேற்று ஓராசிரியர் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் 5 பேருக்கு விலையில்லா தையல் இயந்திரங்களையும் மற்றும் ஓராசிரியர் பள்ளியில் படிக்கும் 435 மாணவர்களில் 5 பேரின் குடும்பத்திற்குத் தேவையான விலையில்லா மளிகை பொருள்களையும் வழங்கினர்.

அதைத் தொடர்ந்து அப்பகுதியில் ஓராசிரியர் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குடும்பத்தினர்களை நேரில் தேடிச் சென்று விலையில்லா தையல் இயந்திரங்கள் மற்றும் மளிகை பொருள்களையும் வழங்கினர். இதில் ஓராசிரியர் பள்ளிகளின் கெளரவசெயளாலர் கிருஷ்ணமாச்சாரி, ஓராசிரியர் பள்ளிகளின் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, வழிகாட்டுதல் படி திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ் குமார் மற்றும் ஆய்வு ஒருங்கிணைப்பாளர் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் ஒவ்வொரு வீட்டிற்கும் தேடிச் சென்று வழங்கினர்.

No comments:

Post a Comment