Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, October 3, 2020

பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பப் பதிவு தொடக்கம்


மருத்துவத் துறைக்கு உதவும் துணைப் படிப்புகளான பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம், பிபிடி உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான விண்ணப்பம் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

' பிஎஸ்சி நர்சிங், ரேடியோதெரபி டெக்னாலஜி, ரேடியோகிராபி, அனஸ்தீசியா, கார்டியாக், கண் மருத்துவம், விபத்து மற்றும் அவசர கால சிகிச்சை தொழில்நுட்பம், மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம், பி. பார்ம், பிபிடி,(இயன்முறை மருத்துவம், பிஓடி, பிஏஎஸ்எல்பி, (செவித்திறன் பேச்சு மொழி நோய்க்குறியியல் பட்டப்படிப்பு) உள்ளிட்ட 17 துணை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசித் தேதி 15.10.2020.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:-

செயலர்,
தேர்வுக்குழு,
162, பெரியார் நெடுஞ்சாலை,
கீழ்ப்பாக்கம்,
சென்னை.10.

என்ற முகவரிக்கு உரிய சான்றிதழ்களுடன் 17-ம் தேதி மாலை 5 மணிக்குள் தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க:-

http://pmc.tnmedicalonline.xyz/Default.Html

www.tnhealth.org

www.tnmedicalselection.org

மேலும் தகவல் அறிய,

http://tnhealth.tn.gov.in/online '.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment