Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, October 12, 2020

இரத்தத்தை சுத்தப்படுத்தும் உணவு பொருள்கள்

எலுமிச்சை சாறு: ரத்தத்தை சுத்திகரிக்க எலுமிச்சை சாறு சிறந்தது. அதில் இருக்கும் அமிலத்தன்மை உடலின் பி.எச் அளவை சமநிலைப்படுத்தும். பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் பிற நச்சுக்களை கொல்லும் தன்மையும் இதற்கு உண்டு. காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறை கலந்து பருகி வந்தால் ரத்தத்தில் உள்ள நச்சுத்தன்மை நீங்கும்.

பீட்ரூட்: ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்க செய்வதற்கு பீட்ரூட் பரிந்துரைக்கப்படுகிறது. அதில் இருக்கும் ஆன்டிஆக்சிடென்டுகள் மற்றும் நைட்ரேட்டுகள் ரத்தத்தை சுத்திகரிக்கும் என்சைம்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவும். கல்லீரலின் செயல்பாடுகளையும் அதிகரிக்க செய்யும்.

வெல்லம்: இது இயற்கையாகவே ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. இதில் இருக்கும் இரும்பு சத்து உடலில் ஆரோக்கியமான ரத்த ஓட்டத்திற்கு வழிவகை செய்யும். ரத்தக்கட்டிகளையும் நீக்க உதவும். இதுதவிர ஹீமோகுளோபின் அளவை மீட்டெடுப்பதற்கும் வெல்லம் உதவும். செரிமானத்திற்கும் துணைபுரியும்.

துளசி: ரத்தம், சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட ஒட்டுமொத்த உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கும் சக்தி துளசிக்கு இருக்கிறது. அனைத்து நச்சுக்களையும் சிறுநீர் மூலம் வெளியேறவும் வைத்துவிடும். தினமும் ஏழு, எட்டு துளசி இலைகளை சாப்பிடலாம். ஒரு கப் துளசி தேநீரும் பருகலாம்.

மஞ்சள்: சிறந்த கிருமி நாசினியாக விளங்கும் மஞ்சள் ரத்தத்தில் உள்ள நச்சுக்கூறுகளை சுத்தம் செய்வதற்கும் உதவும். பாலுடன் மஞ்சள் கலந்து பருகலாம்

No comments:

Post a Comment