Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, October 13, 2020

இருமல், சளி மற்றும் குடல்வலியை போக்கும் குன்றிமணி இலை !!


குன்றிமணி இலைகள், வேர் மற்றும் விதைகள் மருத்துவப் பயன் கொண்டவை. இலைகளின் கசாயம் இருமல், சளி மற்றும் குடல்வலி போக்கும்.

இலையின் சாறுடன் எண்ணெய் கலந்து வலியுடனான வீக்கங்கள் மீது பூசப்படுகிறது. வெண்குஷ்டம், பித்தம், நமைச்சல், போன்ற தோல் வியாதிகளை நீக்க உதவும்.

இந்த குன்றிமணியை பொடி செய்து, அதனுடன் சிறிது வெந்தய பொடி சேர்த்து ஒரு வாரத்திற்கு நல்லெண்ணெயில் ஊறவைக்க வேண்டும். பிறகு அதனை தினமும் தலையில் தேய்த்து வர நன்கு முடி வளரும்.

குன்றிமணி இலைகளின் கசாயமானது இருமல், சளி மற்றும் குடல்வலியை போக்கும். மேலும் இலையின் சாறுடன் எண்ணெய் கலந்து உடலில் வீக்கங்கள் உள்ள இடத்தில் பூசி வர வீக்கம் வடியும். அதுமட்டுமின்றி வெண்குஷ்டம், பித்தம், நமைச்சல், போன்ற தோல் வியாதிகளை குன்றிமணி இலைகள் சிறந்த தீர்வு அளிக்கும்.

குன்றி மணியில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் மிகுந்த மணம் உடையதாக இருக்கும். இதனால் பல்வேறு அழகு சாதன பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.

குன்றிமணி எண்ணெய் கல்லீரல் நோய், நீரிழிவு நோய் மற்றும் பற்கள் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் சிறந்த தீர்வாக அமைகிறது.

No comments:

Post a Comment