Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, October 5, 2020

'இனி நம்பர் பிளேட் இப்படி தான் இருக்க வேண்டும்

சென்னை காவல்துறை வெளியிட்டிருக்கும் விதிமுறைகள் படி நம்பர் பிளேட் இல்லாவிடில், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது.

சென்னை மாநகரில் வாகனங்களின் நம்பர் பிளேட்களில் விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு சென்னை காவல்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் எந்தெந்த வாகனங்களில் எண்களும், எழுத்து வடிவங்களும் எவ்வாறு இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

அதாவது, “70 சிசி திறன் கொண்ட இன்ஜின்- இரு சக்கர வாகனங்களில் முன்னால் நம்பர் பிளேட்டின் எழுத்து உயரம் 15 மி.மீ, தடிமன் 1.2 மி.மீ, இடைவெளி 2.5 மி.மீ இருக்க வேண்டும். பின்னால் நம்பர் பிளேட்டின் எழுத்து உயரம் 35மி.மீ, தடிமன் 7மி.மீ, இடைவெளி 5மி.மீ இருக்க வேண்டும்.

மூன்று சக்கர வாகனங்களில் எழுத்து உயரம் 40 மி.மீ, தடிமன் 7 மி.மீ, இடைவெளி 5 மி.மீ இருக்க வேண்டும். 500 சிசிக்கும் குறைவான 3 சக்கர வாகனங்களில் எழுத்து உயரம் 35 மி.மீ, தடிமன் 7 மி.மீ, இடைவெளி 5மி.மீ இருக்க வேண்டும். பிற வாகனங்களில் எழுத்து உயரம் 65மி.மீ, தடிமன் 10 மி.மீ, இடைவெளி 10 மி.மீ இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

மேலும், தனியார் வாகனங்கள் நம்பர் பிளேட் வெள்ளை நிறத்திலும், அனைத்து வர்த்தக வாகனங்களில் நம்பர் பிளேட் மஞ்சள் நிறத்திலும் இருக்க வேண்டும் என்றும் எழுத்துக்கள் கருப்பு நிறத்தில் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment