Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, October 10, 2020

சத்துணவு அமைப்பாளர் பணிகளுக்கான நேர்காணல் தேர்வு குறித்து தமிழக அரசு அறிவிப்பு !!

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சத்துணவு அமைப்பாளர் பணிக்கான நேர்காணல் தேர்வு தற்காலிகமாக தமிழக அரசு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சத்துணவு அமைப்பாளர் ,சமையலர், சமையல் உதவியாளர் போன்ற பணிகள் காலியாக இருக்கின்றன.இது போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இதற்கு கல்வி தகுதியாக சத்துணவு அமைப்பாளர் பணிக்கு பத்தாம் வகுப்பும், சமையல் உரிமை உதவியாளர் பணிக்கு ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் அரசு அறிவிப்பில் வெளியிட்டிருந்தது.

இதற்கு ஏராளமான விண்ணப்பங்கள் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் கொடுத்து வந்துள்ளனர். ஆனால் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், சமூக இடைவெளியை மறந்து கூட்டம் அதிகரித்து இருப்பதினால் விண்ணப்பம் பெறப்பட்டதையடுத்து நேர்காணல் தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது .

இதனிடையே சத்துணவு அமைப்பாளர் பணிக்கான நேர்காணல் தேர்வு தற்காலிகமாக ஒத்திவைக்கலாம் என்று நேற்று அதிரடியாக தமிழக அரசு உத்தரவு வெளியிட்டது. மேலும் ,இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், இந்தப் பணிகளுக்காக பெறப்பட்டுள்ள விண்ணப்பம் அதிகமாக இருப்பதினால் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே கொரோனா நோய்த்தொற்று முற்றிலும் நீங்காத நிலையில்,நோய் தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்குடன், சத்துணவு அமைப்பாளர் உள்ளிட்ட காலியிடங்களுக்கான நேர்காணல் தேர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது என்று தமிழக அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment