Tuesday, October 20, 2020

உடல்நலப் பிரச்சனைகளை உண்டாக்கும் கம்ப்யூட்டர் பணிகள்

இன்றைக்கு ஐ.டி துறை மட்டுமல்லாமல் எல்லா நிறுவனங்களுமே கம்ப்யூட்டர்மயமாக்கப்பட்டு விட்டன. மணிக்கணக்கில் கம்ப்யூட்டரே கதி என்றிருக்கும் பலர் சரியான நேரத்துக்கு சாப்பிடுவதில்லை. 

அப்படியே சாப்பிட்டாலும் அவர்கள் சாப்பிட்டு முடித்ததும் பணியைத் தொடர்வதால் அவர்கள் உண்ட உணவு செரிமானமாவதில்லை.
கம்ப்யூட்டர் பணியாளர்களிடம் உடல் உழைப்பு குறைந்துவிடுகிறது. மேலும் அவர்கள் போதுமான உடற்பயிற்சிகள் செய்வதில்லை. சாதாரணமாக நடக்கக்கூட நேரமில்லாமல் வாகனங்களில் போய் வருகிறார்கள். 

இப்படி ஒட்டுமொத்தமாக உடலியக்கம் குறைந்துவிடுவதால் பலருக்கு கெட்ட கொழுப்பு அதிகரிப்பது, ரத்த அழுத்தக் கோளாறுகள், தொப்பை, உடல்பருமன் என பிரச்சினைகள் அணிவகுக்கின்றன.

No comments:

Post a Comment