JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
சீருடை பணியாளர் தேர்வாளர்களுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக, இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், தன்னார்வ பயிலும் வட்டம் மூலம், போட்டி தேர்வுகளுக்கு, இலவசமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
தற்போது, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் மூலம், 10 ஆயிரத்து, 906 இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
இந்த தேர்வு எழுதுவோருக்கு, 16ம் தேதி முதல், 'ஆன்லைனில்' இலவச பயிற்சி துவங்கப்படுகிறது.இப்பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர், www.tnusrbonline.org என்ற, இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து, அதற்கான நகலுடன், சாந்தோம் வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகலாம்.
மேலும் விபரங்களுக்கு, 044- - 2461 5160 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment