Search This Blog

Saturday, November 14, 2020

டி.என்.பி.எஸ்.சி., குருப் 1 தேர்வு: இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

0 comments
தர்மபுரி மாவட்ட கலெக்டர் கார்த்திகா, வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில், தன்னார்வ பயிலும் வட்டம் மூலம், டி.என்.பி.எஸ்.சி., குருப் 1 தேர்வுக்கான, இலவச பயிற்சி வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடந்து வருகிறது. இதில், சிறந்த பயிற்றுனர்கள் பயிற்சி அளிப்பதுடன், மாதிரித்தேர்வுகள் நடத்தப்பட்டு, இலவச பாடக்குறிப்புகளும் வழங்கப்படுகிறது. 

அதன்படி, பயிற்சியில் சேர, 200 பேர் பதிவு செய்துள்ளனர். பயிற்சி வகுப்புகள் வரும், 16ல் துவங்குகிறது. இதுவரை பயிற்சியில் சேர விண்ணப்பிக்காதவர்கள் (https://bit.ly/2TIKevB) என்ற இணையதளத்தில், தங்கள் விபரங்களை பதிவேற்றம் செய்து பயன்பெறலாம். 

விபரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை, 04342 296188 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment