Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, November 4, 2020

பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளில் 57 ஆசிரியர்களுக்கு கண்டறியப்பட்ட கொரோனா தொற்று.. முதல்வர் முடிவுக்கு கடும் விமர்சனம்

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இந்தநிலையில் ஆந்திர மாநிலத்தில் , 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு மட்டும் திங்கள் முதல் பள்ளிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதனிடையே தொடங்கிய முதல் நாள் அன்றே, பள்ளிகளில் சுகாதாரத்துறை நடத்திய மருத்துவ பரிசோதனையில், 57 ஆசிரியர்கள் மற்றும் ஆறு மாணவர்களுக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் சித்தூர் மற்றும் நெல்லூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதனால் பள்ளிகளை திறந்த அரசின் முடிவுக்கு ஆந்திர மாநிலத்தில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

கொரோனா வைரஸ் தாக்கத்தால், உலகமே முடங்கிப்போயிருந்த நிலையில், கடந்த 2 மாதங்களாக படிப்படியாக தளர்வுகளுடன் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. ஆனாலும், மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால் பள்ளிகளில் குழந்தைகள் மத்தியில் சமூக இடைவெளி என்பது சாத்தியம் இல்லாதது என பெற்றோர்கள் கருதுகின்றனர்.

மேலும் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடம் பள்ளிக்கு செல்லும் ஆர்வம் இல்லாத நிலையில் மாணவர்களின் வருகை மிகவும் குறைவாகவே இருந்தது. பள்ளிகளில் மாணவர்கள் சமூக இடைவெளி இன்றி கல்வி கற்பது இரண்டாம் கட்ட கொரோனா பரவலுக்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே தற்போது பள்ளிகளை திறப்பதை காட்டிலும் தொடர்ந்து ஆன்லைன் மூலம் மாணவர்களுக்குப் பாடம் எடுக்க வேண்டும் எனப் பெற்றோர்கள் விரும்புகின்றனர்.

No comments:

Post a Comment