Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, November 4, 2020

வெப்பாலை மூலிகையின் நன்மைகள்

விதைகளும் ரத்த சீதபேதிகளைத் தணிக்கவல்லது. குருதி ஒழுக்கோ, நீர் ஒழுக்கோ எவ்விதத்தாயினும், உடலை எங்கு பற்றியதாயினும் அதை வற்றச் செய்யும் நன் மருந்தாகும். உடலில் வியர்வையைத் தூண்டி வெப்பத்தை தணித்து காய்ச்சலையும் உடல்வலியையும் போக்குவிக்கக் கூடியது.

இதன் பட்டைப் பகுதி மற்றும் விதைகள் இந்திய மருத்துவ முறைகளாக சித்த, ஆயுர்வேத முறைகளில் வயிற்று உப்புசம் மற்றும் வயிற்றுப் பொருமல், பித்த சம்பந்தமான நோய்களைப் போக்குவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. இது கல்லீரல் மற்றும் மண்ணீரலை பலப்படுத்தக் கூடியதாகவும், குருதிச் சீர்பாட்டுக்காகவும், முத்தோஷக் கேடுகளை (வாத, பித்த, சிலேத்துமம்) சமன்படுத்தி ஆரோக்கியத்தை நிலைப்படுத்த வல்லதாகவும் விளங்குகிறது.

No comments:

Post a Comment