Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, December 29, 2020

பொதுத்தேர்வுக்கான அட்டவணை 10 நாட்களுக்குள் வெளியிடப்படும்: பள்ளிக்கல்வித்துறை!


கோவில்பட்டியில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன், 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை 10 நாட்களுக்குள் வெளியிடப்படும் என தெரிவித்தார்.

இருக்கும் நாட்களுக்கு ஏற்ப, பாடத்திட்டங்களை மாற்றி அமைத்து, கல்வியாளர்களின் கருத்துகளை ஏற்று, முதலமைச்சரின் ஒப்புதலுடன் விரைவில் அட்டவணை வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்றாத பள்ளிகள் மீது பெற்றோர் உரிய முறையில் எழுத்துப்பூர்வமாக புகாரளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment