Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, December 18, 2020

இந்திய விமானப்படையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு

இந்திய விமானப்படையில் காலியாக உள்ள டெக்னிக்கல் மற்றும் டெக்னிக்கல் அல்லாத பிரிவுகளுக்கான 235 அதிகாரி பணியிடங்களுக்கு Airforce Common Admission Test (AFACT) தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டடுள்ளது.

தேர்வின் பெயர்: AFACT-(Airforce Common Admission Test)

பணி: Commissioned Officer

காலியிடங்கள்: 235

வயதுவரம்பு: . 2022 ஜனவரி 1 முதல் 20 முதல் 24 வயது வரை பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அதாவது ஜனவரி 2, 1998 மற்றும் ஜனவரி 1, 2002 க்கு இடையில் பிறந்திருக்க வேண்டும். DGCA -ஆல் வழங்கப்பட்ட Commercial Pilot Licence வைத்திருப்பவர்களுக்கு வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.

Ground Duty பணிக்கு 20 முதல் 26 வயதிற்குள் இருக்க வேண்டும். ( ஜனவரி 2, 1996 முதல் ஜனவரி 1, 2002 வரை பிறந்திருக்க வேண்டும்).

AFCAT தேர்வு தகுதி:

தேர்வில் பங்கேற்க விரும்புபவர்கள் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். 25 வயதுக்குக் குறைவாக இருக்க வேண்டும், திருமணமாகாதவர்களாக இருக்க வேண்டும். 25 வயதுக்கு மேற்பட்ட திருமணமானவர்கள் விண்ணப்பிக்கலாம், ஆனால் பயிற்சி காலத்தில் அவர்களுக்கு வாழ்க்கைத் துணைக்கு தனி தங்குமிடம் வழங்கப்படாது

சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500

தகுதி: கணித பாடப்பிரிவில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் ஏதாவதொரு பாடப்பிரிவில் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: இந்திய விமானப்படையால் நடத்தப்படும் AFCAT தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விமானப்படையால் நடத்தப்படும் நீச்சல் போட்டி, கயிறு ஏறுதல் போன்றவற்றில் வெற்றி பெற வேண்டும்.

தேர்வு 2021 பிப்ரவரி 20,21 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்வு மையம்: தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி

74 வாரம் பயிற்சி

தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஜனவரி 2022 இல் பயிற்சி ஆரம்பமாகும். தேர்வுக்கான அழைப்பு மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்படும். தேர்வுக்கு அழைக்கப்படுபவர்களுக்கு AC-III Tier/AC Chair Car ரயில், பேருந்து கட்டணம் வழங்கப்படும். பயிற்சி அளிக்கப்படும் காலம்: விமானப்படையில் Flying பிரிவில் சேர விரும்புபவர்களுக்கு 74 வாரங்களும், Ground Duty பிரிவுக்கு 52 வாரங்களும் இந்திய விமானப் படையின் பயிற்சி வழங்கப்படும்.

எப்போது விண்ணப்பிப்பது

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். NCC- Special Entry பிரிவில் சேருபவர்கள் கட்டணம் செலுத்த வேண்டாம்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.afcat.cdac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆண்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.12.2020.. மேலும் விவரங்கள் அறிய www.afcat.cdac.in என்ற இணையதளத்தில் முழு விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment