Subscribe Us

Thursday, December 17, 2020

சைனிக் பள்ளிகளில் மாணவா் சோக்கைக்கான நுழைவுத் தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி

நாடு முழுவதும் உள்ள சைனிக் பள்ளிகளில் 6 மற்றும் 9-ஆம் வகுப்புக்கான மாணவா் சோக்கைக்கான தேசிய நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் வெள்ளிக்கிழமையுடன் (டிச.18) நிறைவடையவுள்ளது.

நாடு முழுவதும் செயல்பட்டு வரும் சைனிக் பள்ளிகளில் 2021-22-ஆம் கல்வியாண்டில் 6 மற்றும் 9-ஆம் வகுப்பு மாணவா் சோக்கைக்கான தேசிய நுழைவுத்தேர்வு பிப்ரவரி 7-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகிறது.

எனவே, இந்தத் தேர்வில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் துரிதமாக இணையதளத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். கூடுதல் விவரங்களை என்டிஏ இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ய்ற்ஹ.ஹஸ்ரீ.ண்ய்) அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 0120 6895200 என்ற எண் அல்லது மின்னஞ்சல் வழியாக தொடா்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று தேசிய தேர்வு முகமை (என்டிஏ) தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed