Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, December 4, 2020

ஜனவரியில் பள்ளிகளை கண்டிப்பாக திறக்க இந்திய பள்ளி தேர்வு சான்றிதழ் கவுன்சில் உத்தரவு

மத்திய அரசின் பள்ளித் தேர்வு சான்றிதழ் கவுன்சில் மூலமாக 10-ம் வகுப்பு, பிளஸ்-2 தேர்வுகள் நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த அமைப்பின்கீழ் நாடு முழுவதும் ஏராளமான பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் ஜனவரி 4-ந் தேதிக்குள் பள்ளிகளை கண்டிப்பாக திறக்க வேண்டும் என இந்திய பள்ளி தேர்வு சான்றிதழ் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து இந்த அமைப்பின் இயக்குநர் ஆராதோன், அனைத்து மாநில முதல் -மந்திரிகளுக்கும் எழுதிய கடிதத்தில், எங்கள் அமைப்பின் கீழ் செயல்படும் பள்ளிகள் அனைத்திலும் 10-வது, பிளஸ்-2 வகுப்புகள் ஜனவரி 4-ந் தேதிக்குள் திறக்க வேண்டும். 

தற்போது ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் உரிய விளக்கங்களை பெறுவதற்கும், புராஜெக்ட், பிராக்டிகல் செய்வதற்கும் பள்ளிகளை திறந்தால்தான் முடியும். எனவே குறிப்பிட்ட காலத்திற்குள் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment