Subscribe Us

Friday, December 4, 2020

பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை, டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு - இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவிப்பு..

நாடு முழுவதும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தேதி வருகின்ற டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டித்துஅகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவித்துள்ளது.

பொறியியல் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு CET முடிவுகள் வெளியிடுவதில் ஏற்ப்பட்டுள்ள தாமதம் கொரோனா பரவல் காரணமாக பல மாநிலங்களில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடத்தி முடிக்கப்படாத நிலை ஆகியவற்றின் காரணமாக பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை வருகின்ற டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப் படுவதாக அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தெரிவித்துள்ளது.

ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் பொறியியல் கலந்தாய்வு நடத்திமுடிக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்துவதில் ஏற்பட்டுள்ள காலதாமதத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் எடுத்துள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed