JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Thursday, December 10, 2020

ரத்த சோகையிலிருந்து விடுபட தேவலோக அமிர்தம்!

தேன் அற்புதமான விலை மதிக்க முடியாத அரிய வகை மருந்து.சுத்தமான தேன்,வருடக்கணக்கில் அப்படியே இருக்கும். இதில் அடங்கியுள்ள அபரிமிதமான பயன்கள் அனைத்தையும் தெரிந்து கொண்டால் அசந்து போவோம்.

தேனை தொடர்ந்து தினமும் குறிப்பிட்ட அளவு எடுத்துக் கொள்வதால் உடலும் ,மனமும் சுறுசுறுப்பாகி வலிமை அடையும்.

உடலின் முக்கிய நோய்களை தீர்க்கும் நல்ல மருந்து தேன் .இறைச்சி உண்ணுவதை விட பலமடங்கு ஆற்றலும் உற்சாகமும் தேனை குடித்தால் உண்டாகும். இஞ்சித் தேனூறல் சாப்பிட்டு வர எப்படிப்பட்ட பித்தமும் உடனடியாக நீங்கிவிடும்.வளரும் குழந்தைகளுக்கு தினமும் அரை தேக்கரண்டி தேனை கொடுத்து வர ரத்தம் சுத்தமாகி ஆற்றலுடனும், அறிவுடனும் விளங்குவார்கள்.

சுத்தமான தேனை காகிதத்தில் விட அப்படியே நிற்கும். பேப்பர் உறிஞ்சாது. தண்ணீரில் கரையாது. தேனும், வெந்நீரும் கலந்து குடிக்க உடல் உறுதி அடையும்.தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல் ஜலதோஷம், தலை வலி பறந்துவிடும். தேனையும் மாதுளம் பழ ரசத்தையும் சம அளவு சேர்த்துத் தினமும் சாப்பிட்டால் இதய நோய்கள் தீரும்.தேனும், பாலும் சாப்பிட்டு வர ரத்தசோகை நோய் நீங்கும்.

No comments:

Post a Comment