Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, January 21, 2021

10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு எப்போது?- அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம்.

கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை எப்போது வெளியாகும் என்றுபது குறித்து விளக்கம் அளித்தார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தற்போது 10, 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களுக்கு 92 சதவீதம் மாணவர்கள் வருகின்றனர். மீதமுள்ள மாணவர்கள் ஆசிரியர்கள் மூலம் பள்ளிகளுக்கு அழைக்கப்படுவார்கள்.

மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி, பள்ளிக்கூடம் முடிந்தவுடன் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நாள்தோறும் ஆன்லைனில் நடைபெறும்.

ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை அறிவிக்கும் நாட்களைத் தவிர மற்ற நாட்களில், வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் நடைபெறும். சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு 10, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்விற்கான தேதி, அதற்கான அட்டவணை வெளியிடப்படும் என்றார்.

மேலும், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடங்களை நிர்ணயிக்கப்பட்ட கால கெடுவுக்குள் நடத்த முடியாது என கல்வியாளர்கள் கூறி வருவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ‘இந்த பாடத்திட்டங்களை படித்தால்தான் மத்திய அரசு கொண்டு வரும் எந்த தேர்வையும் சுலபமாக சந்திக்க முடியும் என்றார்.

10, 12ஆம் வகுப்புகளைத் தவிர, மற்ற வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்படுமா? அல்லது அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவார்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன் ‘பொறுத்திருந்து பாருங்கள்’ என்று பதிலளித்தார்.

No comments:

Post a Comment