Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, January 15, 2021

19-ம் தேதி பள்ளிகள் திறப்பு.! மாணவர்களுக்கு தலா இரண்டு வகையான மாத்திரைகள் வழங்க அதிரடி உத்தரவு.!

வரும் 19-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. பள்ளி திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

கடந்த வருடம் மார்ச் மாத இறுதியில் கொரோனா நோய் தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. அதன் பின்பு வரும் 19ஆம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒருங்கிணைப்பு குழு ஒன்றை பள்ளிக்கல்வித்துறை அமைக்க உத்தரவிட்டுள்ளது.

மேலும், விடுதிகளில் பாதுகாப்பு வழிமுறைகளை வழிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்று கண்காணிக்கவும் பள்ளிக்கல்வி துறையின் அந்த உத்தரவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவில், "ஒவ்வொரு மாணவருக்கும் 10 மல்டி விட்டமின் மற்றும் 10 ஜிங்க் மாத்திரைகள் வழங்க வேண்டும். 18-ம் தேதிக்குள் மாணவர்களின் வருகையை பொறுத்து அந்தந்த பள்ளிகளுக்கு மாத்திரைகளை விநியோகம் செய்ய வேண்டும்" என்று பள்ளிக் கல்வித்துறை அந்த உத்தரவில் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment