Search This Blog

Friday, January 8, 2021

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு, வாரத்தில் 6 நாட்கள் வகுப்பு - பள்ளிக்கல்வித் துறை உறுதி.!!!

0 comments
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பள்ளிகள் திறப்பது பற்றி எந்த ஒரு அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிடவில்லை. அதனால் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் பொங்கலுக்கு பிறகு பள்ளிகள் திறப்பது பற்றி 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு நடந்து கொண்டிருக்கிறது. அதன்படி பெற்றோர்களிடம் கருத்து கேட்டு இன்று மாலைக்குள் அதனை பள்ளி கல்வித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

இதனை அடுத்து தமிழகத்தில் பொங்கல் விடுமுறைக்கு பிறகு 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் முதற்கட்டமாக பள்ளிகளை திறக்க தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. இந்நிலையில் இது தொடர்பான வழிகாட்டுதல்களைப் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 

அதாவது, வாரத்தில் 6 நாட்கள் வகுப்பு நடத்த வேண்டும். ஒவ்வொரு வகுப்பிலும் அதிகபட்சம் 25 மாணவர்கள் மட்டும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தனியார் பள்ளிகள் அதிகாரிகளின் ஒப்புதல் பெற்று பள்ளிகளை திறக்க வேண்டுமென தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment