Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, January 4, 2021

பள்ளிகள் ஏப்ரலில் திறந்தால் போதும் என 69 சதவிகித பெற்றோர்கள் விருப்பம்

பள்ளிகள் ஏப்ரல் மாதத்தில் திறந்தால் போதும் என 69 சதவிகித பெற்றோர்கள் விருப்பம் தெரிவிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து நாடு முழுவதும் 19,000-க்கும் மேற்பட்ட பெற்றோர்களிடம் தகவல்கள் சேகரிக்கப்பட்டன.

அந்த ஆய்வு  முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"தற்போதைய சூழல் மற்றும் கரோனா சூழலைக் கருத்தில் கொண்டு ஏப்ரல் 2021-இல் பள்ளிகள் திறந்தால் போதும் அல்ல அடுத்த கல்வியாண்டு தொடங்கும்போது திறந்தால் போதும் என 69 சதவிகித பெற்றோர்கள் விருப்பம் தெரிவித்தனர். இந்த பெருந்தொற்றுக்கு மத்தியில் குழந்தைகளைப் பள்ளிகளுக்கு அனுப்ப அவர்கள் அச்சப்படுகின்றனர்.

மேலும் 23 சதவிகிதத்தினர் ஜனவரியிலிருந்து பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்று கூறினர்.

ஏப்ரல் 2021 அல்லது பள்ளிகள் திறப்புக்கு முன்பு கரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தால், அதைக் குழந்தைகளுக்கு செலுத்த 26 சதவிகித பெற்றோர்கள் மட்டுமே சம்மதம் தெரிவித்தனர். மேலும் 56 சதவிகித பெற்றோர்கள், கூடுதல் கண்டுபிடிப்புகள் மற்றும் தரவுகளைக் கருத்தில் கொள்ள 3 மாதங்கள் அல்லது அதற்கு மேல் காத்திருக்கப்போவதாகத் தெரிவித்தனர்."

கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதத்திலிருந்து பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. சில மாநிலங்களில் மட்டும் கடந்தாண்டு அக்டோபர் 15 முதல் பகுதியளவில் பள்ளிகள் திறக்கப்பட்டன. எனினும், கரோனா பாதிப்பு எண்ணிக்கைகள் காரணமாக சில மாநிலங்கள் பள்ளிகளைத் திறக்க வேண்டாம் என முடிவு செய்தன. கரோனா தடுப்பூசி வரும் வரை பள்ளிகள் திறக்கப்படாது என தில்லி ஏற்கெனவே அறிவித்துவிட்டது.

பிகார், கேரளம், அசாம், உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா, ஜார்க்கண்ட், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் இம்மாதம் திறக்கப்பட்டன.

தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து ஜனவரி 8 வரை கருத்துக் கேட்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment