JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
காஞ்சிபுரம் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மார்ச் 8ம் தேதி 2020-21ம் ஆண்டுக்கான உலக மகளிர் தின விழா கொண்டாடப்படுகிறது. அப்போது பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த முறையில் சேவைபுரிந்த ஒருவருக்கு முதலமைச்சரால் அவ்வையார் விருது வழங்கப்பட உள்ளது, இந்த விருதுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர், தமிழகத்தை பிறப்பிடமாக கொண்டு, 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். சமூகநல நடவடிக்கைகளில் ஈடுபடுபவராக இருக்க வேண்டும்.குறிப்பாக, சேவை பற்றிய செயல்முறை விளக்க புகைப்படம், பத்திரிகை செய்தி தொகுப்பு, சேவை ஆற்றியதற்கான விரிவாக அறிக்கையுடன் கருத்துருவை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயார் செய்து, அதன் 2 நகல் மற்றும் அருகில் உள்ள காவல் நிலையத்தில் பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகள் ஏதும் இல்லை என்பதற்கான சான்று ஆகியவற்றை வரும் 8ம் தேதி மாலை 5.45 மணிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகம், எண்.43, 2 வது தெரு, காந்தி நகர், (மாவட்ட ஆட்சியரகம் எதிரில்) செவிலிமேடு, காஞ்சிபுரம் - 631501 என்ற முகவரியில் நேரில் சமர்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment