Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, January 28, 2021

பித்தம் குணமாக பாட்டி வைத்தியம்..!

கல்லீரலில் மஞ்சள் நிறத்தில் சுரக்கின்ற ஒரு வகை திரவத்தைத்தான் பித்தம் என்று சொல்கின்றோம். நம் செரிமானத்திற்கு உதவி, இன்றியமையாத பணியை இந்த பித்த நீர் தான் செய்கின்றது. 

முக்கியமாக அதிக கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடும் பொழுது அதற்கு ஏற்றது போல் பித்த நீர் சுரந்து செரிமாணத்திற்கு உதவுகிறது. இந்த பித்த நீர் சுரப்பு என்பது ஒவ்வொரு உடல் நிலைக்கு பொறுத்ததுபோல் வேறுபாடும். ஒரே அளவில் இருக்காது பித்தநீர் அதிகமாக சுரக்கும் போதுதான் நம் உடலில் பிரச்சனைகள் உருவாகும். 

அதாவது காலையில் எழுந்தவுடன் கசப்பான வாந்தி, நாவில் ருசியில்லாமல் இருப்பது, தலைசுற்றல், எந்த உணவை பார்த்தாலும் குமட்டல், வயிறு உப்பிசம் இது போன்று பித்தத்தினால் பலவகையான ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படும். 

பித்தம் குணமாக வைத்தியம்:-

50 கிராம் சுக்கு பவுடர், 50 கிராம் நெல்லிக்காய் பவுடர், 50 கிராம் சீரகம் பவுடர் இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக கலந்து காலை, மதியம், இரவு மூன்று வேளையும் சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீரில் இந்த பவுடரை ஒரு ஸ்பூன் அளவு கலந்து அருந்த வேண்டும். இவ்வாறு தொடர்ந்து அருந்தி வர பித்தம் குணமாகும்.

சுக்கு, சீரகம், மல்லி மற்றும் தேன் இந்த நான்கு பொருள்களையும் சமளவு எடுத்து தேனீர் தயாரித்து தினமும் அருந்தி வர பித்தம் குணமாகும். அதாவது சுக்கும் சீரகம் மற்றும் மல்லி இவை மூன்றையும் சம அளவு எடுத்து அடுப்பில் மிதமான சூட்டில் வறுத்து பொடி செய்து கொள்ளுங்கள்.

பின் ஒரு கிளாஸ் நீரில் ஒரு டீஸ்பூன் தயார் செய்த பொடியை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.

பின் ஆறியதும் தேவையான அளவு தேன் அல்லது பனை வெல்லம் கலந்து தொடர்ந்து அருந்தி வர பித்தம் குணமாகும்.

No comments:

Post a Comment