Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, January 15, 2021

அங்கன்வாடி மையங்களை திறக்க உத்தரவு!!

கொரோனா பாதிப்பு பகுதிக்கு வெளியே அமைந்துள்ள அங்கன்வாடி மையங்களை ஜனவரி 31ஆம் தேதிக்குள்ளாக திறக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா காலத்தில் நாடுமுழுவதும் 14 லட்சம் அங்கன்வாடிகள் முடப்பட்டுள்ளதால் இதை நம்பி உள்ள குழந்தைகள் பெரும் பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே இதுகுறித்து உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என தீபிகா ஜெகத்ராம் சஹானி என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

பல மாதங்களாக அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டுள்ளதால் நாள்தோறும் உணவு பெற்று வந்த குழந்தைகளும், பாலூட்டும் தாய்மார்களும் ஊட்டச்சத்து உணவு கிடைக்காமல் , பட்டினியால் அவதியுறுகின்றனர் , எனவே அவர்களுக்கு ஊட்டச்சத்து உணவு கிடைக்க உரிய வழிவகை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார் .

இந்த பொதுநல மனுவை விசாரித்த நீதிபதி அசோக் பூசன் தலைமையிலான அமர்வு , அனைத்து மாநிலங்களும் வரும் ஜனவரி 31 ஆம் தேதிக்குள்ளாக கன்டெய்ன்மென்ட் பகுதிக்கு வெளியே உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களையும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார் .

மேலும் , பேரிடர் மேலாண்மை ஆணையத்திடம் கலந்து ஆலோசித்த பின்னர் தான் அங்கன்வாடிகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் , ஆனால் கொரோனா கன்டெயின்மென்ட் பகுதிகளில் உள்ள அங்கன்வாடிகளை திறக்கக்கூடாது என உத்தரவில்் தெளிவுபடுத்தியுள்ளார .

அதேவேளையில் , குழந்தைகளுக்கும் , பாலூட்டும் தாய்மார்களுக்கும் விகிதாச்சார ஊட்டச்சத்து உணவு வழங்கப்படுவதை மாநில , யூனியன் பிரதேச அரசுகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார் .

No comments:

Post a Comment