Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, January 29, 2021

ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதி – மாணவிகளை தனிமைப்படுத்த உத்தரவு!!

தமிழகத்தின் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில், அவரது வகுப்பறை மாணவிகளை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

பள்ளி ஆசிரியைக்கு கொரோனா:

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கிற்கு மத்தியில் கடந்த ஜனவரி 19ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கி உள்ளது. பள்ளிகளில் கொரோனா தடுப்பு வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் சேலம், திண்டுக்கல், திருப்பூர் என பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் என சிலருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால் அந்த பள்ளிகள் மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டன.

தற்போது தருமபுரி மாவட்டத்திலும் பள்ளி ஆசிரியை ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாலக்கோடு அருகே உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை ஒருவர் கடந்த ஜனவரி 21ம் தேதி பணிக்கு வந்துள்ளார். பின்னர் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அடுத்த 2 நாட்கள் பள்ளிக்கு வரவில்லை. அந்த ஆசிரியைக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.

அதில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது வகுப்பை சேர்ந்த 42 மாணவிகளை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் அந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவர்க்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இதற்கான முடிவுகள் விரைவில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment