JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
எஸ்பிஐ வங்கி கணக்கிலிருந்து பணத்தை எடுக்கும் போது உங்களது மொபைல் எண்ணுக்கு செய்தி வரும். ஆனால் உங்கள் மொபைல் எண் புதுப்பிக்கப்படாவிட்டால், உங்கள் வங்கி கணக்கிலிருந்து அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனை செய்வதை யாராலும் தடுக்க முடியாது. அப்படி நடந்திருப்பதை சரியான நேரத்தில் நீங்கள் தெரிந்துக் கொள்வதற்கும் வாய்ப்பில்லை.எஸ்பிஐ அறிமுகப்படுத்தியுள்ள ஏடிஎம் திருத்தங்களில், இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை பணம் 10,000 ரூபாய்க்கு மேல் எடுக்கும் போது ஓடிபி எண் உங்களது மொபைல் எண்ணுக்கு வரும் செல்போன் கொண்டு செல்லாவிட்டால், உங்கள் வங்கி கணக்கில் இருந்தே நீங்கள் பணத்தை எடுக்க முடியாது .
ஆக, திருட நினைத்தாலும், எவராலும் 10,000க்கு மேல் வங்கி ஏடிஎம் களில் பணம் எடுக்க முடியாது. இதன் மூலமாக நீங்கள் உங்கள் கார்ட்டை ப்ளாக் செய்வதற்கான அவகாசம் கிடைக்கிறதுஅதே போல், மொபைல் எண்ணை மறக்காமல் உங்கள் வங்கிக் கணக்குடன் இணைத்து விடுங்கள்.
வேறு ஏதாவது காரணத்தினால் உங்களது பழைய நம்பரை மாற்ற நேரிட்டால் வங்கிக்கு அதை உடனே அதை தெரியப்படுத்தவும். மொபைல் எண் மட்டும் அல்ல, மெயில் ஐடியும் அப்படித்தான். ஏனெனில் உங்களது மெயில் ஐடியை வைத்தும் மோசடி செய்ய முடியும் என்பதை மக்கள் உணர வேண்டும்.
No comments:
Post a Comment