Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, January 7, 2021

"அரசு கல்லுாரிகளில் சேர அரிய வாய்ப்பு ! அமைச்சர் .கே.பி. அன்பழகன் அறிவிப்பு !!

அரசு கல்வியியல் கல்லுாரிகளில் பட்டப் படிப்பில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் அன்பழகன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக அரசு கல்வியியல் கல்லுாரிகளில், நடப்பு கல்வியாண்டிற்கு, எம்.எட்., பட்டப் படிப்பு சேர்க்கைக்கு மாணணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். www.tngasaedu.in என்ற இணைய தளத்தில், இன்று முதல், வரும், 13 -ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

ஒரு கல்லுாரிக்கு விண்ணப்பம் பதிவு செய்ய கட்டணம், ரூ.2, விண்ணப்பக் கட்டணம், ரூ.58 என ஆகமொத்தம் ரூ.60 செலுத்தவேண்டும். எஸ்.சி மற்றும் எஸ்.டி. மாணவர்கள் பதிவுக் கட்டணம் ரூ.2 மட்டும் செலுத்தினால் போதுமானது. மாணவர்கள் விண்ணப்பிக்கும்போது, தங்கள் விருப்ப வரிசைப்படி, கல்லுாரிகளைத் தேர்வு செய்ய வேண்டும் என்றும்,

தங்கள் அசல் சான்றிதழ்களையும், இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், 044 -- 2235 1014, 2235 1015, 2827 6791 என்ற எண்களில் இது தொடர்பான கூடுதல் தகவலைப் பெறலாம் என்றும் அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment