JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
கொரோனா ஊரடங்கு உட்பட, பல்வேறு காரணங்களால், 'பிரீமியம்' செலுத்த முடியாமல், காலாவதியான, 'பாலிசி' களை மீண்டும் புதுப்பிக்க, மார்ச், 6 வரை, எல்.ஐ.சி., நிறுவனம் அவகாசம் வழங்கி உள்ளது.
இது குறித்து, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான, எல்.ஐ.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கொரோனா ஊரடங்கு உட்பட, பல்வேறு காரணங்களால், பிரீமியம் செலுத்த முடியாமல், காலாவதியான பாலிசிகளை, மீண்டும் புதுப்பிக்க, மார்ச், 6 வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.இதன்படி, பாலிசிதாரர்கள், தாங்கள் கடைசியாக செலுத்திய பிரீமியம் தேதியில் இருந்து, 5 ஆண்டுகள் வரை, காலாவதியாகி உள்ள பாலிசிகளை புதுப்பிக்கலாம்.
இதற்கு, மருத்துவ பரிசோதனை தேவைப்படாது.மேலும், காலதாமதமாக செலுத்தப்படும், தகுதிவாய்ந்த பாலிசி களுக்கான பிரீமிய தொகைக் கான தாமத கட்டணத்தில், சலுகை வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, 1 லட்சம் ரூபாய் வரையிலான, பிரீமிய தொகைக்கான தாமத கட்டணத்தில், 20 சதவீதம்; 1 லட்சம் ரூபாய் முதல், 3 லட்சம் ரூபாய் வரை, 25 சதவீதம்; 3 லட்சம் ரூபாய் மற்றும் அதற்கு மேல் உள்ள பிரீமிய தொகைக்கு, 30 சதவீதம் சலுகை வழங்கப்படும்.
அதே சமயம், மருத்துவம் மற்றும் அதிக, 'ரிஸ்க்' உள்ள பாலிசிகளுக்கு, இந்த சலுகை பொருந்தாது. பாலிசிதாரர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தங்களது காலாவதியான பாலிசிகளை, அருகில் உள்ள எல்.ஐ.சி., அலுவலகங்களில் புதுப்பித்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment