அரசு ஊழியர்கள் 109 பேர் கைது

கடலுாரில் மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் 109 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில மையம் சார்பில், அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்கள் சிறப்பு காலமுறை ஊதியம் ரத்து செய்ய கோருவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

10ம் நாளான நேற்று பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. அதனைத் தொடர்ந்து நடந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 89 பெண்கள் உட்பட 109 பேரை போலீசார் கைது செய்தனர்.
Share:

No comments:

Post a Comment

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel