Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, February 5, 2021

பொதுத்தேர்வு அட்டவணையால் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வந்த புதிய சிக்கல்... வருத்தத்தில் மாணவர்கள்..!

ஒரு பொறியாளராக விரும்பும் 12 ஆம் வகுப்பு மாணவருக்கான முக்கிய தேர்வுகள், ஜேஇஇ மெயின் தேர்வு மற்றும் பொது தேர்வு. இந்நிலையில், இந்த ஆண்டு இந்த தேர்வுகள் மாணவர்களுக்கு கவலைக்குரியதாக மாறிவிட்டது. காரணம் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு அட்டவணையை கடந்த 2-ஆம் தேதி வெளியிட்டார்.

இதனால், 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு புதிய சிக்கல் வந்துள்ளது. கடந்த டிசம்பரில் 2021 ஜே.இ.இ மெயின் தேர்வுகளின் தேதிகள் வெளியிடப்பட்டது. அதில், ஜேஇஇ மெயின் இந்த ஆண்டு முதல் 4 முறை நடத்தப்படம் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி ஜே.இ.இ. மெயின் தேர்வு பிப்ரவரி 23 முதல் பிப்ரவரி 26 வரையும், மார்ச் 15 முதல் 18 வரையும் , ஏப்ரல் 27 முதல் 30 வரையும் மற்றும் மே 24 முதல் 28 வரையும் நடைபெறுகிறது.

நான்காவது கட்ட ஜேஇஇ மெயின் தேர்வு மே 24 முதல் மே 28 வரை நடைபெறுவதால் அதே நேரத்தில், அதேநாளில் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு மாணவர்களின் உயிரியல் தேர்வு மே 24 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

ஜே.இ.இ மெயின் தேர்வில் சுமார் 5 லட்சம் மாணவர்கள் கலந்துகொள்ள உள்ளார்கள் என்றும் சிபிஎஸ்இ தேர்வில் லட்சம் மாணவர்கள் வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ஒரே நாளில் இரு தேர்வுகள் வருவதால் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஜேஇஇ மெயின் தேர்வு 2021 தேதியை மறுபரிசீலனை செய்யுமாறு கோரியுள்ளனர்.

இதனால், உயிரியல் மாணவர்கள் பெரும் மன அழுத்தத்தில் உள்ளனர். ஜே.இ.இ மெயின் தேர்வு தேதி மாற்றாத நிலையில், மாணவர்கள் சிபிஎஸ்இ வாரிய தேர்வில் கவனம் செலுத்துவதோடு தவிர வேறு வழியில்லை. சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வுகள் முடிந்ததும் ஜேஇஇ மெயின் தேர்வு நடத்தவேண்டும் என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து ட்விட்டர் மூலம் மத்திய கல்வி அமைச்சரிடம் மாணவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ஆனால், இதுகுறித்து இன்னும் எந்தவித முடிவும் அறிவிக்கவில்லை.இந்த பொறியியல் நுழைவுத் தேர்வு (ஜேஇஇ மெயின் தேர்வு) 12 ஆம் வகுப்பு வாரிய தேர்வின் மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment