Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, February 22, 2021

நாடு முழுவதும் ஜேஇஇ மெயின் 2021 பிப்ரவரி 23 தொடங்கி 26-ம் தேதி வரை நடைபெறுகிறது

நாடு முழுவதும் 2021-ம் ஆண்டுக்கான ஜேஇஇ மெயின் தேர்வு நாளை தொடங்கி இரண்டு ஷிஃப்டுகளாக நடைபெறுகிறது.

ஐஐடி,என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். இது ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு (மெயின்), ஜேஇஇ பிரதானத் தேர்வு என 2 கட்டங்களாக நடத்தப்படும்.

அதன்படி இந்த ஆண்டுக்கான ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு நாளை (பிப்ரவரி 23) தொடங்கி 26-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. ஜேஇஇ மெயின் 2021 தேர்வு ஆண்டுக்கு 4 முறை ஆங்கிலம், இந்தி, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் தேர்வு நடைபெற உள்ளது.

இதில் கட்டிடவியலுக்கான இளங்கலைப் படிப்பும் வடிவமைப்புக்கான இளங்கலைப் படிப்புக்கான தேர்வும் நாளை தொடங்கி இரண்டு ஷிஃப்டுகளாக நடைபெறுகிறது. இதற்காகத் தேர்வுகளை நடத்தும் தேசியத் தேர்வுகள் முகமை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

தேர்வுக்காக ஹால்டிக்கெட்டும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், கரோனா வைரஸ் குறித்த சுய உறுதிமொழிக் குறிப்பும் இணைக்கப்பட்டுள்ளது. முதல்கட்டத் தேர்வு பிப். 26ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

அதைத் தொடர்ந்து மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களிலும் ஜேஇஇ 2021 தேர்வு நடைபெற உள்ளது. ஒரே மாணவர் 4 முறையும் தேர்வை எழுதலாம். எனினும் அவற்றில் பெற்றுள்ள அதிகபட்ச மதிப்பெண்களே கணக்கில் கொள்ளப்படும்.

No comments:

Post a Comment