Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, February 2, 2021

பகுதி நேர ஆசிரியர்களுக்கு ரூ.7,700 லிருந்து ரூ.10,000ஆக உயர்த்தப்பட்ட அரசு அரசாணை வெளியீடு G.O AVAIL

12,483 பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதியம் ரூ.7,700 லிருந்து ரூ.10,000ஆக உயர்த்தப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி , மாநிலத் திட்ட இயக்குநரின் கருத்துருவை ஏற்று , மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட அரசாணை மூலம் அரசுப் பள்ளிகளில் கல்விசார் ( உடற்கல்வி , ஓவியம் , இசை மற்றும் வாழ்க்கைக் கல்வி ) இணைச் செயல்பாடுகளைப் பயிற்றுவிக்கும் பொருட்டு தோற்றுவிக்கப்பட்ட 16,549 பகுதி நேரப் பயிற்றுநர் பணியிடங்களில் தற்போது பணியில் உள்ள 12,483 பகுதி நேரப் பயிற்றுநர்கள் , அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி மாணவர்களின் கல்விசார் இணைச் செயல்பாடுகளைச் சிறக்க செய்து வருவதினால் , அவர்களது பணித்திறனை மேலும் மேம்படுத்தும் பொருட்டு மேற்கண்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள இதர வழிமுறைகளுடன் கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு இவர்களது மாத ஊதியத்தினை ( மே மாதம் நீங்கலாக 11 மாதங்களுக்கு மட்டும் ) ரூ .7,700 / -லிருந்து ரூ .10,000 / - ஆக ( ரூபாய் பத்தாயிரம் மட்டும் ) உயர்த்தி வழங்க முடிவு செய்து அவ்வாறே அரசு ஆணையிடுகிறது.

Part time Teacher Salary Hike GO - Download here...

No comments:

Post a Comment