Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, February 28, 2021

9, 10, 11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்பதை ரத்து செய்ய போகிறதா அரசு?

9, 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வும் ரத்து செய்யப்படுவதாகவும், அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் சட்டசபையில் சட்டப்பேரவை 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் அறிவிப்பை வெளியிட்ட நிலையில் பலர் இந்த அறிவிப்பை வரவேற்தனர் ஆனாலும் பல எதிர்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. 

இந்நிலையில் தனியார் பள்ளிகள் பெற்றோர் ஆசிரியர் சங்கம் (PTA) சார்பில் 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்பதை ரத்து செய்து அனைத்து பள்ளிகள் மற்றும் வகுப்புகளை உடனே திறந்து அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளில் எளிய முறையில் தேர்வு நடத்த அனுமதிக்க வேண்டும் எனவும் ஐகோர்ட்டு தீர்ப்புப்படி 75 சதவீதம் கட்டணம் வசூலிக்க அரசாணை வெளியிட வேண்டும் என்பது உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், கே.ஆர்.நந்தகுமார், தனியார் பள்ளிகள் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கி நடத்திய நிலையில் தலைவர் ஜெ.கனகராஜ், துணைத்தலைவர் ஜெ.பி.விமல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டம் குறித்து [பேசிய கே.ஆர்.நந்தகுமார், ''பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதாக அறிவித்திருக்கும் நிலையில் எந்த அடிப்படையில் மதிப்பெண் இல்லாமல் மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்போகிறார்கள்? நாங்கள் எங்கள் நலனுக்காக போராடவில்லை மாணவர்கள் நலனுக்காகத்தான் போராடுகிறோம். எல்.கே.ஜி. முதல் 12-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு ஷிப்ட் முறையில் பள்ளிகள் செயல்படுத்தி பொதுத்தேர்வு கட்டாயம் நடத்த வேண்டும்'' என்றார்.

1 comment: