Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, February 8, 2021

வெங்காயம்- தேன் சிரப் சாப்பிட்டால் குளிர்காலப் பிரச்னைகளை தவிர்க்கலாமா? எப்படி சாப்பிடவேண்டும்?

வெங்காயத்தில் வைட்டமின்கள் ஏ மற்றும் பி சத்துக்கள், மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், தாதுக்கள், சல்பர் கலவைகள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் உள்ளன. தற்போது பெரும்பாலான பகுதிகளில் குளிர்காற்று வீசுவதால் ஏராளமான பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது.

இத்தகைய வானிலை பல்வேறு பொதுவான குளிர் கால பிரச்சனைகளை ஏற்படுத்துவதால் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அழிக்கிறது. இதன் விளைவாக காய்ச்சல், இருமல், சளி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனை துளசி, தேன், வெங்காயம், மிளகு, மஞ்சள் தூள் போன்ற வீட்டில் கிடைக்கும் எளிய பொருட்களை கொண்டே குணமாக்கலாம். அதிலும் குறிப்பாக வெங்காயம் மற்றும் தேன் கலந்து தயாரிக்கப்படும் சிரப் நல்ல பலனை தருகிறது. வெங்காயத்தின் நன்மைகள் அனைத்து வீடுகளிலும் பொதுவாக சமையலுக்காக வெங்காயம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் சமையல் ருசிக்காக மட்டுமின்றி ஆரோக்கிய நன்மைகளும் அடங்கியுள்ளது. இதில் நோய்த்தொற்றுக்கு எதிராக போராட உதவும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. வெங்காயத்தில் உள்ள ஃபிளாவனாய்டுகள் மற்றும் அல்கெனில் சிஸ்டைன் சல்பாக்ஸைடுகள் ஆக்ஸிஜனேற்றிகளாக செயல்படுகிறது. இவை ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்குவதால் குளிர்கால பிரச்சனைகள் மட்டுமின்றி இதய நோய் பிரச்சனைகள் ஏற்படாமலும் தடுக்கிறது.

சாதாரண சளிபொதுவான சளி தொற்றுநோய் பிரச்சனைகள் ஏற்பட்டால் நம் மூக்கு மற்றும் தொண்டையில் அழற்சி பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனால் மூக்கு மற்றும் தொண்டையில் புண் ஏற்படுகிறது. இந்த பிரச்னைகளுக்கு வெங்காயம் ஒரு சிறந்த மருந்தாகும். வெங்காயத்தில் ஃபிளாவனாய்டு குர்செடின் உள்ளது, இது ஒரு ஆக்ஸிஜனேற்றியாக மட்டுமல்லாமல், அழற்சி எதிர்ப்பு பண்பாகவும் செயல்படுகிறது, இது குளிர்கால பிரச்சனைகளில் இருந்து உடனடி நிவாரணம் தருகிறது.

ஒவ்வாமைக்கு நல்லது

வெங்காய சாறு உட்கொள்வதால் அதில் உள்ள குர்செடின் கலவை ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமையிலிருந்து பாதுகாக்கிறது. கூடுதலாக, வெங்காயத்தில் உள்ள செலினியம் தாதுக்கள் உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
பெரியவெங்காயம், சின்ன வெங்காயம் என இரண்டு வகை இருந்தாலும் இரண்டுமே ஏறக்குறைய ஒரே பலன் தருபவைதான். ஆனால் வைத்தியத்தில் சின்ன வெங்காயத்தை அதிகமாக பயன்படுத்துகிறhர்கள்.

தேனின் நன்மைகள்

தேன் இருமலுக்கு பொதுவாக பயன்படுத்தும் ஒரு மருந்தாகும். தேனில் உள்ள ஆண்டிமைக்ரோபியல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து குளிர்கால நோய்கள் வராமல் பாதுகாக்கிறது. இது தவிர தேனில் உள்ள ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருதய நோய்கள் மற்றும் புற்றுநோயை எதிர்த்து போராட உதவுகின்றன. மேலும் வறட்டு இருமல் பிரச்னை இருப்பவர்கள் தேன் சாப்பிடலாம்.

வெங்காயம் - தேன் சிரப் தயாரிக்கும் முறை :

முதலில் 8 சின்ன வெங்காயத்தை எடுத்து நறுக்கி வைத்து கொள்ளவும். ஒரு வாணலில் தேன் ஊற்றி குறைவான தீயில் வைத்து சூடேற்றி, அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை எடுத்து போட்டு சூடு செய்யவும். பின்னர் இறக்கி ஆறவைத்து தினமும் சாப்பிடலாம்.

குளிர்காலத்தில் ஏற்படும் ஜலதோஷம், இருமல், மார்புச்சளி, சளிக்காய்ச்சல் முதலியவை உடனே குணமாக சம அளவு வெங்காய, தேன் கலந்து தயாரித்து சாப்பிடவும். இதனை தினமும் நான்கு தேக்கரண்டி வீதம் சாப்பிடவேண்டும். 100 கிராம் வெங்காயத்தில் ஈரப்பதம் 82%, புரதம் 1.2%, கார்போஹைடிரேட் 11.1%, 47 மி.கி கால்சியமும், 50 மி.கி பாஸ்பரஸும், 0.7 மி. கி இரும்புச் சத்தும், வைட்டமின் 'பி', வைட்டமின் 'சி' முதலியனவும் உள்ளது.

No comments:

Post a Comment