JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அரசு பள்ளி ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து பள்ளி வளாகம் கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது.கொரோனா அச்சுறுத்தலால் 10 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
பள்ளிக்கு வரும் மாணவர்களின் உடல் வெப்பநிலை தினமும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, கிணத்துக்கடவு அரசு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர்கள் தினமும் மாணவர்களின் உடல் வெப்ப நிலையை அளவிடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் பணியை செய்து வந்த 38 வயது உடற்கல்வி ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆசிரியை பணியாற்றி வந்த கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியை சுகாதாரத்துறையினர் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்து செய்துள்ளனர். மாணவர்கள் ஆன்லைன் மூலம் படிப்பை தொடர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட பின் ஆசிரியை ஒருவர் கொரோனோவால் பாதிக்கப் படுவது இதுவே முதல் முறையாகும்.
இதுகுறித்து சுகாதரத்துறையினர் கூறுகையில், “ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பள்ளியில் பணிபுரிந்த நபர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றனர்.
No comments:
Post a Comment