JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
அரசின் இலவச 'நீட்' பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இந்தஆண்டு கரோனா பரவலால் இணையவழியில் 'நீட்' பயிற்சிவகுப்புகளை நடத்த பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்தது.இதற்காக இ-பாக்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் நீட் பயிற்சியில் பங்கேற்க 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்திருந்தனர். பயிற்சி வகுப்புகள் கடந்த நவ.9-ம் தேதி தொடங்கியது.
இந்நிலையில், நீட் பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து பள்ளிக்கல்வி அதிகாரிகள் சிலர் கூறியதாவது:
இந்த ஆண்டு நீட் பயிற்சிக்கு 28 ஆயிரத்துக்கும் மேலான மாணவர்கள் பதிவு செய்த நிலையில், தற்போது சராசரியாக 3,500 பேர்மட்டுமே வகுப்புகளில் கலந்துகொள்கின்றனர். பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க மாணவர்களை கட்டாயப்படுத்த முடியாது.
மருத்துவக் கல்வியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்தி, பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கவைக்க பள்ளி தலைமையாசிரியர்கள் மூலம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தபயிற்சியானது நடப்பு கல்வியாண்டுக்கான (2020-21) 'நீட்' தேர்வுக்கு முந்தைய வாரம் வரைவழங்கப்படும். இந்த ஆண்டு முதல் வருடத்துக்கு 2 முறை 'நீட்'தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. எனவே, இந்த நல்வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment