JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
வாட்ஸ் அப் நிறுவனம் தனது பயனாளர்களின் தகவல்களை பிற நிறுவனங்களுக்கு விற்பதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து `சிக்னல்' மற்றும் `டெலிகிராம்' செயலிகளின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.இந்நிலையில் சன்டேஸ் செயலியை தேசிய தகவல் மையம் (என்ஐசி) வடிவமைத்துள்ளது. இந்த செயலியை ஆப்பிள் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இது இன்னமும் கூகுள் பிளே ஸ்டோரில் பதிவேற்றம் செய்யப்படவில்லை. இதைப் பயன்படுத்த விரும்புவோர் இதற்கான அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து இதை பதிவிறக்கம் செய்யலாம். இணையதள வடிவிலும் இந்த செயலி உள்ளது. 'வாட்ஸ் அப்'பில் உள்ள அனைத்து வசதிகளும் இந்த செயலியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment