Monday, February 8, 2021

எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம்-ல் பணமெடுக்க புதிய விதி... மீறினால் அபராதம் உஷார்

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

இந்தியாவின் மிகப்பெரிய கடன் வழங்குநரான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) தற்போது ஒரு பெரிய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அது என்னவென்றால் தனது கஸ்டமர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஆட்டோமேட்டிக் டெல்லர் மெஷின்களில் (ATM) பணத்தை வித்ட்ராவ்  செய்வதற்கான விதிகளை திருத்தியுள்ளது. SBI-ன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியாகியுள்ள புதிய விதிகளின்படி, போதிய பேலன்ஸ் இல்லாத காரணத்தால் ஒவ்வொரு முறையும் ஒரு பரிவர்த்தனை தோல்வியடைந்தால் வங்கி தனது கஸ்டமர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கும்.

SBI இணையதளத்தில் கிடைக்கும் தகவல்களின்படி, பேங்க் கஸ்டமர்களிடம் போதுமான பேலன்ஸ் இல்லாததால் தோல்வியுற்ற பரிவர்த்தனைக்கு (failed transaction) ரூ .20-க்கும் மேல் GST வசூலிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது. SBI தனது புதிய விதிகளில், நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கும் இனி பேங்க், தனது கஸ்டமர்களிடம் வரியை வசூலிக்கும் என்றும் கூறியுள்ளது. கஸ்டமர்களுக்கு "நிர்ணயிக்கப்பட்ட வரம்பை மீறிய கூடுதல் நிதி ட்ரான்ஷாக்ஷன்களுக்கு" ரூ .10 முதல் ரூ .20 வரை ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். மெட்ரோ நகரங்களில் ஒரு மாதத்தில் SBI கஸ்டமர்கள் எட்டு முறை (அதாவது 5 SBI ஏடிஎம்கள் மற்றும் 3 பிற வங்கி ஏடிஎம்களில் இருந்து ) எக்ஸ்ட்ரா கட்டணம் இல்லாமல் பிரீயாக பணத்தை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் SBI அக்கவுண்ட் பேலன்ஸ்களை பின்வரும் முறையில் நீங்கள் செக்அவுட் செய்து பார்க்கலாம்:

உங்கள் SBI அக்கவுண்ட் பேலன்ஸை சரிபார்க்க, உங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 9223766666 என்ற எண்ணுக்கு SMS Balance என்று அனுப்பலாம். அதேபோல கட்டணமில்லா பேலன்ஸ் என்கொயரி செய்ய 9223766666 என்ற எண்ணிற்கு மிஸ்ட்காலை அளிப்பதன் மூலமும் உங்கள் அக்கவுண்ட் பேலன்களை சரிபார்க்கலாம்.

SBI ஏடிஎம்களில் இருந்து பணத்தை எடுப்பதற்கான விதிகள் என்ன தெரியுமா?

SBI-யில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் ATMகளில் இருந்து ரூ .10,000 க்கும் அதிகமான பணத்தை வித்ட்ராவ் செய்ய முடியும். ஆனால் அதற்கு ஒரு முறை கடவுச்சொல் (OTP) தேவைப்படும். ஒவ்வொரு முறையும் SBI ஏடிஎம்களில் இருந்து ரூ .10,000 க்கு மேல் பணத்தை எடுக்க முயற்சிக்கும்போது அவர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு OTP அனுப்பப்படும்.

OTP- சரிபார்க்கப்பட்ட ATM பரிவர்த்தனை எவ்வாறு செயல்படுகிறது?

அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையைக் குறைக்க OTP- சரிபார்க்கப்பட்ட ஏடிஎம் பரிவர்த்தனைகளை SBI அறிமுகப்படுத்தியது. பணத்தை ஏடிஎம்மில் இருந்து எடுக்க OTP அடிப்படையிலான இந்த முறையை அறிமுகப்படுத்திய ஸ்டேட் வங்கி பணம் எடுக்கும் முறையில் மற்றொரு அடுக்கு பாதுகாப்பைச் சேர்த்தது. மற்றொரு வங்கியின் ஏடிஎம்மில் இருந்து, SBI அட்டை வைத்திருக்கும் வாடிக்கையாளர் பணத்தை எடுக்கும்போது இந்த வசதி பொருந்தாது, அட்டைதாரர் எடுக்க விரும்பும் தொகையை உள்ளிட்டவுடன், ஏடிஎம் மெஷின் OTP திரையை காண்பிக்கும். பரிவர்த்தனையை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வாடிக்கையாளர் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP எண்ணை உள்ளிட வேண்டும்.

செக் டெபாசிட் & செக் மூலம் பணம் எடுக்க SBIன் புதிய ரூல்ஸ்:

50,000 ரூபாய்க்கு மேலான காசோலைகளுக்குத் தேவையான தகவல்கள் மீண்டும் உறுதிப்படுத்தப்பட வேண்டியிருக்கும். இது கஸ்டமரின் விருப்பப்படி செய்ய வேண்டும். ரிசர்வ் வங்கியின் செக் விதிமுறைகள் காசோலை கொடுப்பதை பாதுகாப்பானதாக்குவதற்கும், மோசடிகளைத் தடுப்பதற்கும் உதவும். ஏனெனில் வங்கி தனது கஸ்டமர்களிடம் தகவல்களை ஒருமுறைக்கு இருமுறை உறுதிப்படுத்தும். குறிப்பாக காசோலையை வழங்குபவர், காசோலையின் தேதி, பெறுநரின் பெயர் மற்றும் பணம் செலுத்திய தொகையை மீண்டும் தெரிவிக்க வேண்டும். மேலும் காசோலை வழங்கும் நபர் இந்த தகவலை SMS, மொபைல் ஆப்ஸ், இணைய வங்கி அல்லது ஏடிஎம் போன்ற மின்னணு வழிமுறைகள் மூலம் வழங்கலாம்.

இதன் பிறகு காசோலை செலுத்தும் முன் மீண்டும் இந்த விவரங்கள் குறுக்கு சோதனை செய்யப்படும். அதில் ஏதேனும் தகவல் மிஸ்மேட்ச் ஆகிறது என்றால், அந்த பரிவர்த்தனை நிறுத்தி வைக்கப்படும். இது போன்ற நெருக்கடியான சூழ்நிலையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் 50,000 ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட அனைத்து பரிவர்த்தனைகளுக்கும், காசோலைகளை வழங்கும் அனைத்து அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கும் வங்கிகள் இந்த புதிய நடைமுறையை பயன்படுத்தும். எனினும் 5 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட காசோலைகளுக்கும் வங்கிகள் இந்த விதிமுறைகளை கட்டாயமாக்கலாம்.

SBI-ன் டிசம்பர் காலாண்டு நிகர மதிப்பு 4.2 சதவீதம் குறைந்துள்ளது,

இதற்கிடையில், SBI கடந்த வியாழக்கிழமை ஒருங்கிணைந்த டிசம்பர் காலாண்டு நிகரத்தில் ரூ .6,257.55 கோடியாக 4.20 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. இதற்கு முன்னர் இந்த ஆண்டுக்கு முந்தைய காலகட்டத்தில் 4,500 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதும் குறிப்பிடத்தக்கது. முழுமையான அடிப்படையில், SBI-ன் நிகர லாபம் ரூ .5,196.22 கோடியாக இருந்தது, இது முந்தைய ஆண்டில் 5,583.36 கோடி ரூபாயாகவும், முந்தைய செப்டம்பர் காலாண்டில் ரூ .4,574.16 கோடியாகவும் இருந்ததை அளிக்கப்பட்ட தகவலின் வாயிலாக தெரியவந்துள்ளது.
Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE

No comments:

Post a Comment

பொதுச் செய்திகள்

கல்விச் செய்திகள்

Featured News