JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
தமிழக அரசின் நடவடிக்கையை ரத்து செய்ய அழுத்தம் கொடுத்ததற்காக, தி.மு.க., தலைவர் ஸ்டாலினை, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் நிர்வாகிகள் சந்தித்து, நன்றி தெரிவித்தனர்.
தி.மு.க., தலைமை அறிக்கை:புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 2019ம் ஆண்டில் போராட்டம் நடத்திய, 6,500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மீது, அரசு நடவடிக்கை எடுத்தது.இதற்கு கண்டனம் தெரிவித்து, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து, தமிழக அரசுக்கு பல்வேறு அழுத்தங்களைக் கொடுத்து வந்த நிலையில், தமிழக அரசு, தற்போது ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை திரும்பப் பெற்றுள்ளது.
எனவே, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் தியாகராஜன் மற்றும் நிர்வாகிகள், ஸ்டாலினை சந்தித்து, தங்கள் மீதான நடவடிக்கைகளை, தமிழக அரசு ரத்து செய்ய, தொடர்ந்து அழுத்தம் கொடுத்தற்காக நன்றி தெரிவித்தனர்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தி.மு.க., தலைமை மற்றொரு அறிக்கை:
* உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்று, புகார் மனு அளித்த, 24 மணி நேரத்தில், தமிழக அரசு நிதியுதவி வழங்கியது. நிதியுதவி கிடைத்திட குரல் கொடுத்தற்காக, ஸ்டாலினை சந்தித்து, ஆரணி எழிலரசி நன்றி தெரிவித்தார். அப்போது, தி.மு.க., சார்பில், அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் குடும்ப உதவி நிதியாக, ஸ்டாலின் வழங்கினார்.
* ஈரோடு, நாமக்கல், விருதுநகர், வட சென்னை, கடலுார் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த அ.தி.மு.க., - அ.ம.மு.க., - ரஜினி மக்கள் மன்றம் மற்றும் மாற்று கட்சிகளில் இருந்து நுாற்றுக்கும் மேற்பட்டோர், ஸ்டாலின் முன்னிலையில், நேற்ற தி.மு.க., வில் இணைந்தனர். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment