JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல், மூடப்பட்ட அனைத்துக் கல்லூரிகளும் இன்று முதல் திறக்கப்படுகின்றன.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, அனைத்துப் பள்ளிகளும், கல்லூரிகளும் மூடப்பட்டன. இந்நிலையில், தமிழக அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் மாதம் முதல் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இதனைத் தொடர்ந்து, கலை அறிவியல் மற்றும் தொழிற்கல்வி கல்லூரிகளின் அனைத்து மாணவர்களுக்கும், இன்று முதல் வகுப்புகள் தொடங்குகின்றன. இதேபோல், 10 மற்றும் 12ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு ஏற்கனவே பள்ளிகள் இயங்கி வரும் நிலையில், 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் இன்று முதல் தொடங்குகின்றன. அதேநேரத்தில், மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் இருந்து, பள்ளி வருகைக்கான அனுமதி கடிதத்தை அவசியம் பெற வேண்டும் எனவும், அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment