JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
தமிழில் கருத்தாழம் மிக்க அரிய நூல்களை புதுப்பிக்க நூலாசிரியர்களுக்கு நூல் ஒன்றுக்கு ரூ.2 லட்சம் வீதம் ரூ.10 லட்சம் நிதியுதவி திட்டத்தில் பயன்பெற வரும் 26ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர் சந்தானலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்: தமிழ் ஆர்வலர்கள், மொழியை வளர்ப்போர் உள்ளிட்டோர் பயன்பெறும் வகையில் பல்வேறு வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதேபோல், தமிழ் வளர்ச்சித்துறை மூலம் மாநில அளவில் கலை சார்ந்த நூல்களை எழுதும் நூலாசிரியர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் கருத்தாழமிக்க அரிய தமிழ் நூல்களை பதிப்பிக்க நிதி உதவி வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் மூலம் நூல் ஒன்றுக்கு ரூ.2 லட்சம் வீதம் 5 நூல்களுக்கு ரூ.10 லட்சம் வரையில் நிதியுதவி வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் நிறைவேற்ற அரசு உத்தரவிட்டுள்ளது.
எனவே இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் நூலாசிரியர்கள், தமிழில் கருத்தாழமிக்க கலைகள் சார்ந்த நூல்களை பதிப்பிக்க பின்வரும் முகவரிக்கு வரும் 26-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் பங்கு பெறுவதற்கான விண்ணப்பம் பெறவும் மற்றும் நிபந்தனைகள் பற்றி அறிந்து கொள்ள உறுப்பினர் - செயலாளர் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், 31 பொன்னி பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை, சென்னை-600028 அல்லது தொலைபேசி எண். 044-24937471 தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment