JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஆலோசிக்க, 'ஜாக்டோ - -ஜியோ' அமைப்பின் உயர்மட்டக் குழு கூட்டம், திருச்சியில் நாளை நடக்கிறது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - -ஜியோ சார்பில், பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் போராட்டம் நடத்தப்படுகிறது.இதில் ஒரு கட்டமாக, சென்னை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே, பிப்., 8 முதல், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்கும், 72 மணி நேர உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
மூன்று நாட்கள் போராட்டம் நடந்த போதும், அரசு தரப்பில் பேச்சு நடத்த முன் வரவில்லை. அதனால், அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். சட்டசபை தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில், போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து முடிவு செய்வதற்காக, திருச்சியில் நாளை உயர்மட்டக்குழு கூட்டம் நடக்கிறது. கூட்டமைப்பில் உள்ள, 24 சங்கங்களின் உயர்மட்டக்குழு நிர்வாகிகள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்கின்றனர்.முதல்வரை சந்தித்து பேசுவது, கோட்டை நோக்கி பேரணி, கண்டன ஆர்பாட்டம், கையெழுத்து இயக்கம் என, பல்வேறு வகை போராட்டங்களை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என, சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment