Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, February 3, 2021

சித்தா மருத்துவ படிப்புதரவரிசை வெளியீடு

சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை, அடுத்த வாரம் துவங்க உள்ளது.

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் கீழ், ஐந்து அரசு மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, 330 இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு, 50 இடங்கள் போக, 280 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன.அதேபோல, 24 தனியார் கல்லுாரிகளில், 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு போக, மீதமுள்ள இடங்களில், 65 சதவீதம் மாநில அரசுக்கும், 35 சதவீதம் நிர்வாக ஒதுக்கீட்டுக்கும் உள்ளன.

இந்நிலையில், சித்தா, ஆயுர்வேத, யுனானி, ஓமியோபதி ஆகிய பட்டப் படிப்புகளுக்கு, 2020 - 21ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கு, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பித்தனர்.அதன்படி, அரசு ஒதுக்கீட்டுக்கு, 3,492 பேரும்; நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 1,346 பேரும் விண்ணப்பித்தனர். விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு பின், தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.

அதில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 3,310 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 1,301 பேரும் இடம் பெற்றுள்ளனர். மேலும், அரசு ஒதுக்கீட்டு இடங்களில், அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டிற்கான பட்டியலில், 119 பேர் இடம் பெற்றுள்ளனர். இதற்கான கவுன்சிலிங், அடுத்த வாரம் துவங்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் விபரங்களுக்கு, https://tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தை தொடர்ந்து பார்வையிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment