கணித பட்டதாரி ஆசிரியர் பதவி முன்னுரிமை பட்டியல் வெளியீடு

இடைநிலை, உடற்கல்வி, சிறப்பாசிரியர்கள் தரத்தில் இருந்து, பட்டதாரி ஆசிரியர் (கணிதம்) பதவி உயர்வுக்கு தகுதியானவர்களின் முன்னுரிமை பெயர்பட்டியல் வெளியாகியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில், வெள்ளிரவெளி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை வசந்தி பெரியாயிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த, ஆசிரியை பவுலின்மேரி, அய்யன்காளிபாளையம் வி.கே. அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை சாருலதா, வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மகேந்திரன், கொளத்துப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை தமிழ்ச்செல்வி ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த முன்னுரிமை பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இப்பட்டியலில் திருத்தம் இருப்பின் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் கடிதத்தை பெற்று, முதன்மை கல்வி அலுவலர் ஒரு வாரத்துக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

தற்போது பணிபுரியும் இடம் மாறியிருப்பின் அவ்விவரத்தினையும் தெரியப்படுத்த வேண்டுமென, பள்ளி கல்வி இணை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.

இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்களின் பட்டியல் வெளியீடு!
Share:

No comments:

Post a Comment

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel